என்றிக்’கின் இசை நிகழ்ச்சியில் இழப்பு, உளைச்சலுக்கு நட்டஈடு கேட்குதாம்

என்றிக்’கின் இசை நிகழ்ச்சியில் இழப்பு, உளைச்சலுக்கு நட்டஈடு கேட்குதாம்

அமெரிக்க பொப் பாடகரான என்றிக் இக்லெஸியஸின் இசை நிகழ்ச்சியின் போது, தமக்கு உண்டான இழப்பு, பாதிப்பு, மனவுளைச்சல் என்பவற்றுக்கு நட்டஈடாக, 22 மில்லியன் ரூபாயைக் கேட்டு ஒரு சட்டவுரைஞரும் அவர் மனைவியும் ஒரு கோரிக்கைக் கடிதத்தை அனுப்பியுள்ளனர்.

தாம், 35,000 ரூபாய் நுழைவுச் சீட்டுக்களை வாங்கியதாகவும் திடலுக்கு அனுமதிக்கப்பட முன்னர், இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக வெளியே காத்திருக்க வைக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த இசை நிகழ்வு, மோசமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது எனவும் ஒலியமைப்பும் தரக்குறைவாக இருந்ததாகவும், நிகழ்வு பிந்தி ஆரம்பிக்கப்பட்டமைக்கான விளக்கம் கொடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் முறையிட்டுள்ளனர்.

இவ்வளவு விலை கொடுத்து அனுமதிச் சீட்டை வாங்கிய தமக்கு, மட்டுப்படுத்தப்பட்ட ஆட்களுடன் அமர்ந்திருந்து பார்க்கும் ஒழுங்கமைப்பு இருக்குமென எதிர்பார்த்ததாகவும் ஆனால், குறைந்த கட்டண அனுமதிச் சீட்டுக்களை வாங்கியவர்கள், ‘அதி முக்கிய நபர்கள்’ பகுதிக்குள் நுழைந்ததாகவும் அவர்களது முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.