இன்றைய இரவு நேர இசை நிகழ்ச்சியில் “ப்ரா” வீசத்திட்டம் – பாதுகாப்பு படையினர் உசார் நிலையில்

இன்றைய இரவு நேர இசை நிகழ்ச்சியில் “ப்ரா” வீசத்திட்டம் – பாதுகாப்பு படையினர் உசார் நிலையில்

ஸ்ரீலங்கா டெலிகாம் ஸ்பீட்அப் (SLT Speed Up) நிறுவன அனுசரணையில் இன்று(31) இரவு கொழும்பு காலி  முகத்திடலில் நடைபெறவுள்ள இரவு இசை நிகழ்ச்சியின் போது மேடையினை நோக்கி “ப்ரா”வினை (Bra) வீசுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் பிரிவுக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வாறு “ப்ரா”வினை (Bra) வீசுவதற்கு தீர்மானிக்கக் காரணம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களை இக்கட்டாண சூழ்நிலைக்குத் தள்ளவேயாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை குறித்த கலாச்சாரத்தினை சீரழிக்கும் நிகழ்வினை தடுக்கவும் பாதுகாப்பு பிரிவு ஆயத்த நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேற்குறித்த திட்டத்திற்கு பிரதான காரணம் பிரபல பொப் இசைப்பாடகர் என்றிக் இக்லசியஸ் இனது இசை நிகழ்ச்சியின் இடைநடுவில் “ப்ரா”ஒன்றினை யுவதியொருவர் வீசியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜனாதிபதி மைத்ரிபால கருத்துத் தெரிவித்தமையே ஆகும்.

இன்னும், ஜனாதிபதி நாட்டின் கலாச்சாரத்திற்கு பங்கம் விளைவித்த என்றிக் நேரடி இசை நிகழ்ச்சியினை இலங்கைக்குள் அனுமதித்தவர்களை திருக்கை வாலால் அடிக்க வேண்டும் எனவும் பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.

ஸ்பீட்அப் (SLT Speed Up) நிறுவனத்தின் இரவு இசை நிகழ்ச்சியில் இவ்வாறு “ப்ரா”வினை வீசத் திட்டமிட்டிருப்பது அதன் ஒருங்கிணைப்பாளரான டெலிகொம் இனது தலைவராய் இருப்பது ஜனாதிபதியின் சகோதரர் குமாரசிங்க சிறிசேன என்பதாலேயாகும். இதனால் ஜனாதிபதியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கவே குறித்தவர்கள் முயற்சிக்கின்றனர்.

குறித்த இசை நிகழ்ச்சியானது இன்று இரவு 8.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள நிலையில் ரூபவாஹினியின் நேத்ரா தொலைக்காட்சி அலைவரிசையிலும் PEO TV யின் சேனல் 20 ஊடாகவும் நேரடியாய் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்த இசை நிகழ்ச்சியானது 2015 வருடத்தினை வழியனுப்புவதற்கு நடாத்தப்படும் மாபெரும் இசை நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி குறிக்கப்பட்டுள்ளது.

மேலும், “வாயோ” இசைக்குழுவானது இதற்கு இசை அமைக்கின்றது.