சாதனையை நிலைநாட்டிய இந்திய குடிமகள் சுருதி

சாதனையை நிலைநாட்டிய இந்திய குடிமகள் சுருதி

தனது அப்பா டீ விற்ற நீதிமன்றத்தில் மகள் நீதிபதியாக பதவியேற்ற உள்ளம் நெகிழும் சம்பவம் ஒன்று இந்தியாவின் பஞ்சாப்பில் நடந்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் டீ விற்று வருபவர் சுரிந்தர் குமார். இவரது மகள் சுருதி.

நகோதர் எனும் சிறு நகரத்தில் வசித்து வரும் சுருதி, நீதித்துறை சார்ந்த, பஞ்சாப் மாநில சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்று, நீதிபதி பதவிக்கு தேர்வானார்.

சிறு வயதில் இருந்தே நீதித்துறை சார்ந்த படிப்புகள் மீது ஆர்வம் கொண்டிருந்த சுருதி முதல் முயற்சியிலேயே நீதிபதி தேர்வில் சித்தியடைந்துள்ளார்.

தனது மகளின் இலட்சியம் நிறைவேறியது குறித்து சுரிந்தர் குமார் கூறுகையில்,

இதையும் விட மகிழ்ச்சியான தருணம் என் வாழ்வில் அமையப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

சுருதியின் இந்தச் சாதனையை பாராட்டியுள்ள, ராஜ்ய சபா உறுப்பினரான அவினாஷ் ராய் கண்ணா, ‘சுருதி, பஞ்சாப் மாநிலத்திற்கே பெருமை சேர்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.