சென்னையை கலக்கவரும் மைக்கேல் ஷூமேக்கரின் மகன் மிக் ஷூ

சென்னையை கலக்கவரும் மைக்கேல் ஷூமேக்கரின் மகன் மிக் ஷூ

பார்முலா ஒன் கார்பந்தயத்தின் ஜாம்பவானான மைக்கேல் ஷூமேக்கரின் மகன் பந்தயம் ஒன்றில் கலந்துக்கொள்வதற்காக சென்னை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார் பந்தயங்களின் சிகரமாக சொல்லப்படும் பார்முலாஒன், கார்பந்தயத்தில் ஏழு முறை சாம்பியன் பட்டம் வென்றவர் மைக்கேல் ஷூமேக்கர்.

உலகின் சிறந்த கார் பந்தய வீரர் என அழைக்கப்படும் இவர் கடந்த 2013ஆம் ஆண்டு பனிச்சறுக்கின்போது தலையில் அடிபட்டு கோமா நிலைக்குச் சென்றார். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்து வருகிறார்.

அவரது மகனான மிக் ஷூமேக்கர்(16) தந்தையை போலவே கார் பந்தயத்தில் ஈடுபாடு உடையவர்.

இதுவரை 22 ‘ஃபார்முலா 4’ பந்தயங்களில் பங்கேற்று, 1 பந்தயத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

தற்போது வேன் அமர்பூர்ட் ரேசிங் அணியின் சார்பாக போட்டிகளில் பங்கேற்றுவருகிறார்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டையில் நடக்கும் எம்.ஆர்.எஃப் சேலஞ்ச் கார் பந்தயப் போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியா வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐரோப்பாவிற்கு வெளியே நடக்கும் போட்டிகளில் அவர் கலந்து கொள்வது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், அவருடன் இரண்டு முறை எஃப் 1 பட்டம் வென்ற எமர்சன் ஃபிட்டிபார்டியின் பேரன் பீட்ரோ ஃபிட்டிபார்டி, எஃப்1 டிசைனர் ஆட்ரியன் நியூவியின் மகன் ஹாரிசன் நியூவி மற்றும் ஜீன் ஆலேசியின் மகன் கில்லியானோ அலேசி உள்ளிட்ட பல வாரிசுகளும் இந்த போட்டியில் பங்கேற்கின்றனர்.

இந்தியாவின் சார்பில் தருண் ரெட்டி இப்போட்டியில் கலந்துகொள்ளவுள்ளார்.