இப்படியும் பூமியில் ஓர் குட்டி தேவதை

இப்படியும் பூமியில் ஓர் குட்டி தேவதை

சீனாவில் 7 வயது சிறுமி ஒருவர் தனது தாத்தா பாட்டிக்கு பணிவிடை செய்வதோடு மட்டுமல்லாமல் பள்ளிக்கும் சென்று படித்துவருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் Huanghua என்ற நகரில் இருக்கும் குக்கிராமத்தில் வசித்து வரும் Yi Miaomiao(7) என்ற இச்சிறுமியின் தந்தை கடந்த ஆண்டு யூலை மாதம் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இவரது தாயார் சுற்றுலா செல்கிறேன் என்று கூறிவிட்டு சென்றவர் இன்றுவரை வீடு திரும்பவில்லை, இந்நிலையில் தாத்தா பாட்டியின் அரவணைப்பில் இவர் வாழ்கிறார் என்று சொல்வதை விட, இச்சிறுமியின் அரவணைப்பிலேயே தாத்தா- பாட்டி வாழ்க்கின்றனர் என்று தான் சொல்லவேண்டும்.

அந்த அளவுக்கு இச்சிறுமி செய்யும் பணிவிடைகள் நம்மையெல்லாம் வியக்கவைக்கின்றன.

தாத்தா பாட்டியினர் தங்களிடம் உள்ள ஒரு ஏக்கர் நிலத்தில், சோளம், உருளைக்கிழங்கு போன்றவற்றினை விவசாயம் செய்து, விளையும் பொருட்களை விற்று பிழைப்பு நடத்திவருகின்றனர்.

இவற்றிற்கெல்லாம் உறுதுணையாக இருக்கும் சிறுமி, விவசாயம் செய்வது, பெரிய அடுப்பில் சமைப்பது, பாத்திர பண்டங்களை சுத்தம் செய்வது போன்ற வேலைகளை செய்துவருகிறார்.

அதுமட்டுமன்றி, இவரது பாட்டி கொஞ்சம் மன வளர்ச்சி குறைபாடுடையவர், மேலும் அவரது வலது கை ஊனமுற்றிருப்பதால், அவருக்கு உணவினை ஊட்டுவது, பாட்டியின் தலையை வாரிவிடுவது போன்ற பராமரிப்பு வேலைகளையும் செய்துவருகிறார்.

இவர்கள் வசிப்பது மிகவும் குக்கிராமம், அதுமட்டுமின்றி இரண்டு மணி நேரம் பயணம் செய்த பின்னரே நகரத்தை அடைய முடியும்.

தற்போது, ஆரம்ப பள்ளியில் அடியெடுத்து வைத்துள்ள இவர், வகுப்பில் கொடுக்கும் வீட்டுப்பாடங்களை, மங்கலான வெளிச்சத்தில் வைத்து படிக்கிறார், இவர் குறித்த புகைப்படங்கள் சீனாவின் ஊடகங்களில் வைரலாக பரவியதையடுத்து, 20,000 இணைய பயன்பாட்டாளர்கள் இச்சிறுமியின் படிப்பிற்காக 5,500 Yuan தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

china-girl china-girl.

Yi-Miaomiao Yi-Miaomiao..