மொடல் உள்ளாடை

மொடல் உள்ளாடை

பிரிட்­ட­னி­லுள்ள ஆரம்பப் பாட­சா­லை­யொன்றில் ஆசி­ரிய உத­வி­யா­ள­ராக பணி­யாற்­றிய 21 வய­தான ஜெம்மா லெய்ரட் எனும் யுவதி பிரிட்­டனின் தர்ஹாம் பிராந்­தி­யத்­தி­லுள்ள பாட­சா­லை­யொன்றில்  பணி­யாற்­றி­யவர்.

 உள்­ளா­டை­க­ளுக்கு மொட­லாக போஸ் கொடுத்­த­போது பிடிக்­கப்­பட்ட புகைப்­ப­டங்­களை மேற்­படி ஆரம்ப பாட­சாலை மாண­வ­ர்­களின் பெற்­றோ­ருக்குத் தெரி­ய­வந்­தது.

இது தொடர்­பாக பாட­சாலை நிர்­வா­கத்­திடம் பெற்றோர் பலர் முறைப்­பாடு செய்­த­தை­ய­டுத்து, ஆசி­ரிய உத­வி­யாளர் பணி­யி­லி­ருந்து ஜெம்மா லெய்ர்ட் நீக்­கப்­பட்­டுள்ளார்.

ஆனால், அதி­கா­ரி­களின் இந்­ ந­ட­வ­டிக்­கையை ஜெம்மா விமர்சித்­துள்ளார். தான் ஆசி­ரிய உத­வி­யாளர் பணிக்கு விண்­ணப்­பித்­த­போது, பெஷன்­துறை நிறு­வ­ன­மொன்­றுக்கு உள்­ளாடை மொட­லாகப் பணி­யாற்­றி­யதை பாட­சாலை அதி­கா­ரிகள் அறிந்­தி­ருந்­தனர்” என அவர் கூறியுள்ளார். அதிகாரிகளின் நடவடிக்கையானது தன்னை ஒரு விபசாரி போன்று உணரவைத்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்

15858ad_201047711