இணைய துஷ்பிரயோகம் குறித்து 750 முறைப்பாடுகள்

இணைய துஷ்பிரயோகம் குறித்து 750 முறைப்பாடுகள்

இந்த வருடத்தின் கடந்த நான்கு மாத காலப் பகுதியில் 750 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, இலங்கை கனணி அவசர பதிலளிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவற்றில் பெரும்பாலானவை பேஸ்புக் சமூக வலைத்தலம் குறித்தே கிடைக்கப்பெற்றுள்ளதாக, இலங்கை கனணி அவசர நடவடிக்கை அணியின், பாதுகாப்பு பொறியியலாளர் ரோஷான் சந்திரகுப்த குறிப்பிட்டுள்ளார்.

போலி பேஸ்புக் கணக்குகள் மற்றும் தேவையற்ற முறையில் பேஸ்புக் கணக்குகளுக்குள் ஊடுருவுதல் குறித்தே பெரும்பாலும் முறையிடப்பட்டுள்ளன.

இதேவேளை, போலி மின்னஞ்சல் தொடர்பிலும் சில முறைப்பாடுகள் குறித்த காலப் பகுதியில் கிடைக்கப் பெற்றுள்ளதாக, ரோஷான் சந்திரகுப்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.