நிதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்

நிதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்று எதிர்கட்சிகளினால் கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான விவாதமானது ஜுன் மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ளதாக கட்சி தலைவர்களது கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன் அன்றைய தினம் 2 மணியிலிருந்து 6 மணி வரை விவாதம் இடம்பெறவுள்ளதோடு மாலை 6 மணியளவில் வாக்கெடுப்பு நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க ஆளுங்கட்சியினர் தீர்மானித்துள்ள நிலையில், ஆளுங்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து உறுப்பினர்களும் பாராளுமன்றத்திற்கு சமூகமளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர்களது வெளிநாட்டுப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதோடு, வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் நாடு திரும்புமாறு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பொது எதிர்கட்சியை சேர்ந்த 34 பேர் அமைச்சருக்கு எதிராக கையெழுத்திட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மார்ச் மாதம் 24ஆம் திகதி சபாநாயகரிடம் கையளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.