இளஞ்சிவப்பு பந்துடன் முதல் முதலாக மோதுகிறது.. திமுத்,குசல் மற்றும் திரிமன்னவுக்கு வரம்.. (அணி விவரம்)

இளஞ்சிவப்பு பந்துடன் முதல் முதலாக மோதுகிறது.. திமுத்,குசல் மற்றும் திரிமன்னவுக்கு வரம்.. (அணி விவரம்)

இளஞ்சிவப்பு பந்தினை உபயோகித்து, முதன் முதலில் இலங்கை அணியினர் எதிர்வரும் 04ம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்கவுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் ‘A’ பிரிவுக்கு எதிராக நடைபெறவுள்ள இவ்வதிகாரபூர்வமற்ற போட்டியானது நான்கு போட்டிகளை கொண்டுள்ளது.

எவ்வாறாயினும், இப்போட்டிகள் பகலிரவாக நடைபெறவுள்ளது.

மேற்குறித்த டெஸ்ட் போட்டி மற்றும் ஒருநாள் போட்டிகளுக்காக மேற்கிந்திய தீவுகள் அணியின் ‘A’ அணியினர்  எதிர்வரும் ஞாயிறன்று (02) இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.

மேலும், மேற்குறித்த நான்கு நாள் போட்டிகளுக்கான இலங்கை அணி வீரர்களது விபரம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் தலைமையானது; திமுத் கருணாரத்னவிற்கும் உபதலைமை குசல் பெரேராவிற்கும் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை ‘A’  அணியின் விவரம்..

திமுத் கருணாரத்ன (தலைவர்) 
லஹிரு திரிமன்ன 
குசல்  பெரேரா (உப தலைவர்)

ரொஷான் சில்வா 
சரித் அசலங்க 
நிரோஷன் திக்வல்ல
அசேல குணரத்ன 
அவிஷ்க பெர்னாண்டோ 
அனுக் பெர்னாண்டோ 
விமுக்தி பெரேரா 
பிரபாத் ஜயசூரிய 
லக்ஷான் சந்தகன்
அசித பெர்னாண்டோ
லஹிரு குமார
கசுன் மதுஷங்க

போட்டிக்காக நேர அட்டவணை

ஒக்டோபர்  : 4-7 – அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டி –  கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானம்.
ஒக்டோபர்   : 11-14 – அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டி – பல்லேகல மைதானம்
ஒக்டோபர் : 18-21 – அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டி – ரங்கிரி தம்புள்ள மைதானம்
ஒக்டோபர் : 24 – முதல் ஒருநாள் போட்டி – ரங்கிரி தம்புள்ள மைதானம்
ஒக்டோபர் : 27 – இரண்டாம் ஒருநாள் போட்டி – குருநாகல வெலகெதர மைதானம்
ஒக்டோபர் : 30 – மூன்றாம் ஒருநாள் போட்டி – கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானம்.