பாதுகாப்பற்ற புகையிரத கடவையாளர்களின் கோரிக்கைகளுக்கு அமைச்சரவை அனுமதி.

பாதுகாப்பற்ற புகையிரத கடவையாளர்களின் கோரிக்கைகளுக்கு அமைச்சரவை அனுமதி.

பாதுகாப்பற்ற புகையிரத கடவையாளர்களின் கோரிக்கைளை ஆராய்ந்து அவர்களது பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குழுவின் பரிந்துரைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியாக 676 பாதுகாப்பற்ற தொடரூந்து கடவைகள் காணப்படுகின்றன.

ஒரு கடவைக்கு மூன்று பேர் என்ற வீதம் குறைந்தளவு 2 ஆயிரத்து 28 பேர் தேவைப்படுகின்றனர்.

எனினும், தற்போது ஆயிரத்து 953 பேர் மாத்திரமே பாதுகாப்பற்ற புகையிரத கடமைகளில் கடமையாற்றுகின்றனர்.

நாள் ஒன்றுக்கு 250 ரூபா வீதம் மாதம் ஒன்றுக்கு 7,500 ரூபா வேதனமே அவர்களுக்கு வழங்கப்படுகின்றது.

ஒரு புகையிரத கடவைக்காக 22,500 ரூபாவை வழங்கும் பரிந்துரையே பாதுகாப்பற்ற தொடரூந்து கடவையாளர்களின் கோரிக்கைளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குழுவினால் முன்வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடதக்கது.