பிரதியமைச்சர் ரஞ்சன் இனது “மாயா” திரைப்படத்தினை இடைநிறுத்துமாறு பிரதமரிடம் கோரிக்கை.

பிரதியமைச்சர் ரஞ்சன் இனது “மாயா” திரைப்படத்தினை இடைநிறுத்துமாறு பிரதமரிடம் கோரிக்கை.

பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நடித்து வெளியாகியுள்ள புதிய திரைப்படமான மாயா திரைப்படம் காண்பிக்கப்படுவதை பிரதமர் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

அந்த இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

கடந்த 27ம் திகதி பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தனது இல்லத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் இறுதியில் ஊடகவியலாளர் ஒருவரை திட்டி அச்சுறுத்தி, கமராவை தாக்கிய சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

நுகர்வோரான மக்கள் ஊடகங்கள் வாயிலாகவே தகவல்களை பெற்றுக்கொண்டனர். தகவல்களை அறிந்து கொள்வது நுகர்வோரின் உரிமை. அந்த உரிமை மீற மக்கள் பிரதிநிதிகளுக்கு எந்த வகையிலும் உரிமையில்லை.

தனது கருத்தை வெளியிட ஊடகவியலாளர் ஒருவருக்கு இருக்கும் புனிதமான உரிமையை நாங்கள் மதிக்கும் அதேவேளை, ஊடகவியலாளர்களுடன் எப்படி நடந்து கொள்ள தேவையான பயிற்சிகளை அரசியல்வாதிகளுக்கு வழங்க வேண்டும் என்பதே எமது அமைப்பின் நிலைப்பாடாகும் எனவும் குறித்த கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.