தாழமுக்கம் காரணமாக வடபகுதியில் சூறாவளி அபாயம்..

தாழமுக்கம் காரணமாக வடபகுதியில் சூறாவளி அபாயம்..

திருகோணமலையிலிருந்து 450 கிலோமீற்றர் தூரத்தில் தாழமுக்கம் நிலைகொண்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

இத்தாழமுக்கம் யாழ். குடாநாட்டின் வடமேற்காக நகரும் அதேவேளை, அடுத்து வரும் 12 மணித்தியாலங்களில் இத்தாழமுக்கமானது சூறாவளியாக மாறக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக, யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகு, இன்று(30) அறிவித்துள்ளது.

நாளை(01) நள்ளிரவு இத்தாழமுக்கமானது, தமிழ் நாட்டின் வடபகுதியூடாக நகருமெனவும் 2ஆம் திகதி வரை காற்றுடன் கூடிய மழை காணப்படுமெனவும் வானிலை அவதானிப்பு நிலையத்தினால் தகவல்  தெரிவிக்கப்பட்டுள்ளதென, யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகு மேலும் தெரிவித்துள்ளது.