தண்ணீர் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை – நீர்வழங்கல் அமைச்சர்..

தண்ணீர் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை – நீர்வழங்கல் அமைச்சர்..

தண்ணீர் கட்டணத்தை எதிர்காலத்தில் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படுவதாக நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

குருநாகலில் நேற்று(28) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நீர் வழங்கல் முகாமைத்துவ திணைக்களத்துக்கு திறைசேரியால் நிதி வழங்கப்படுவதில்லை.

இந்நிலையில், தமது கடனை தாமே செலுத்த வேண்டும் என திறைசேரி தெரிவிப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனை நுகர்வோர் புரிந்து கொள்ள வேண்டும்.

தண்ணீர் கட்டணத்தை அதிகரிக்க முயற்சிக்கும் போது, பாரிய அநீதி இழைக்கப்படுவதாக மக்கள் கருதுகின்றனர்.

ஆனால், நீர் வழங்கல் திணைக்களத்தை பொருளாதார ரீதியாக பலப்படுத்த வேண்டுமாயின், தண்ணீர் கட்டணத்தில் திருத்தங்களை மேற்கொள்வது குறித்து விரைவில் தீர்மானமொன்றுக்கு வரவேண்டும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(rizmira)