கொழும்பில் சேகரிக்கப்படும்  குப்பை பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு..

கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பை பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு..

கொழும்பில் குப்பை பிரச்சினைக்கு தீர்வாக முத்துராஜவெலயிற்கு தற்காலிகமாக குப்பைகளை கொண்டு செல்லும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சனயாப்பா தெரிவித்துள்ளார்.

இதனிடயே, நீண்ட கால தீர்வின் கீழ் குப்பை பொருட்களை உற்பத்தி செய்யும் நுகர்வோர் மற்றும் மாகாண சபை நிறுவனங்களிடம் இருந்து ஒரு தொகையை அறவிட நேரிடும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நகர சபை மூலம் தயாரிக்கப்படும் குப்கைகளின் அளவை குறைக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆலோசனை வழங்குமாறு அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போதைக்கு கொழும்பு நகர சபையின் மூலம் நாள் ஒன்றுக்கு 750 மெட்றிக் டொன் குப்பைகள் சேகரிக்கப்படுவதுடன் அவற்றில் 350 டொன் வரை கரதியானவுக்கும் 90 டொன் தொம்பேக்கும் கொண்டு செல்லப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

(rizmira)