கட்டாரில் நிலவும் இராஜதந்திர நெருக்கடியால் இலங்கையின் அந்நிய செலாவணியில் குறைவு..

கட்டாரில் நிலவும் இராஜதந்திர நெருக்கடியால் இலங்கையின் அந்நிய செலாவணியில் குறைவு..

கட்டாரில் நிலவும் இராஜதந்திர நெருக்கடி காரணமாக இலங்கைக்கு கிடைக்கப் பெறும் அந்நிய செலாவணி குறைவடைந்துள்ளதாக மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஸ் குணவர்த்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நேற்று(29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;

அந்நிய செலாவணி கிடைக்க பெறுகின்றமை குறைவடைந்துள்ளதன் காரணமாக நாட்டில் பொருளாதார பிரச்சினை தலைதூக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனவே இது தொடர்பாக ஆழமாக சிந்தித்து இதிலிருந்து மீள்வதற்கான உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

 

(rizmira)