இலங்கை அணி தோல்வியினை தழுவியிருக்க வேண்டும்.. – சிம்பாப்வே அணித்தலைவர் சாடல்..

இலங்கை அணி தோல்வியினை தழுவியிருக்க வேண்டும்.. – சிம்பாப்வே அணித்தலைவர் சாடல்..

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முன்றாவது நடுவரின் கடினமான முடிவுகளே தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டதாக ஜிம்பாப்வே அணியின் தலைவர் க்ரீமர் தெரிவித்துள்ளார்.

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி அங்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் இரு அணிகள் மோதிய ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 4-விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து ஜிம்பாப்வே அணியின் தலைவர் க்ரீமர் கூறுகையில்;

“..இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின் போது இலங்கை அணி வீரர் திக்வெல்ல ஸ்டம்பிங் செய்யப்பட்ட போது, மூன்றாவது நடுவர் அவுட் இல்லை என்று கூறினார்.

ஆனால் அது ரீப்ளேயில் பார்த்த போது, அவர் கிரீசிற்கு வெளியே இருந்தது தெளிவாக தெரிந்தது. இருப்பினும் நடுவர் அவுட் கொடுக்காமல் இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாகவும், அதுவும் தோல்விக்கு ஒரு காரணம்…” எனவும் கூறினார்.

மேலும் இம்முடிவு சரியாக இருந்திருந்தால் போட்டியின் முடிவு மாறியிருக்கும் என்று தெரிவித்திருந்தார்.

 

 

(rizmira)