கர்ப்பிணியொருவர் பிணையாளரானால் வட்டியுடன் உடனடிக் கடன் – குறித்த அமைப்பு தொடர்பில் அவதானம்..

கர்ப்பிணியொருவர் பிணையாளரானால் வட்டியுடன் உடனடிக் கடன் – குறித்த அமைப்பு தொடர்பில் அவதானம்..

கர்ப்பிணியொருவர் பிணையாளராக கைச்சாத்திட்டால் 30% வட்டியுடன் உடனடியாக கடன் வழங்கும் அமைப்புபொன்று மாத்தளை மாவட்டத்தில் செயற்படுவாக மத்திய மாகாண சபை உறுப்பினர் ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

மாத்தளை மாவட்ட ஒருங்கிணைந்த குழு கூட்டத்தில் வைத்து அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு கடன் வழங்கும் அமைப்பு, மாதாந்த கட்டணத்தை செலுத்தும் வரை கடன் பெற்ற கர்ப்பிணியின் வீட்டில் இருப்பதாகவும், அவ்வாறு கடனை செலுத்தாவிடின் கணவர் தொழில் புரியும் இடத்திற்கு சென்று கடனுக்கான மாதாந்த கட்டணத்தை பெற்று கொள்வதாகவும் குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது.

இந்த கடனால் கணவன் மற்றும் மனைவிக்கும் இடையே பிரச்சினை ஏற்படுவதாகவும், இதனால் இந்த அமைப்பு தொடர்பில் மாவட்ட அபிவிருத்தி குழு, விரிவான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என மத்திய மாகாண சபை உறுப்பினர் ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இதனுடன் இந்த அமைப்பு மத்திய வங்கியின் அனுமதியை பெற்றிருக்காவிடின் அதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

(rizmira)