துருக்கி நாட்டின் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 6 பேர் பலி.. – சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு…

துருக்கி நாட்டின் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 6 பேர் பலி.. – சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு…

துருக்கி நாட்டின் மத்திய தரைக்கடலை ஒட்டியுள்ள போட்ரம் நகரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 6 பேர் பலியாகினர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதோடு சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு.

துருக்கி நாட்டின் கிரீக் தீவுகளில் போட்ரம் மற்றும் டாட்கா நகரங்களில் இன்று(21) அதிகாலை 1.31 மணி அளவில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.7 ரிக்டர் அளவில் பதிவானது. ப்ளோமரியின் தெற்கு பகுதியில் உள்ள ஏஜியன் கடலில் சுமார் 11 கிலோமீட்டர் தூரத்தில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. துருக்கி மற்றும் கிரீக் தீவுகளின் பல்வேறு பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2011-ஆம் ஆண்டு துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால், 600க்கும் மேற்பட்டோர் பலியானது
குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)