75 ஆயிரம் ரூபாவை மாதாந்தம் மாகாணசபை உறுப்பினர்களுக்கு வழங்க அரசு தீர்மானம்

75 ஆயிரம் ரூபாவை மாதாந்தம் மாகாணசபை உறுப்பினர்களுக்கு வழங்க அரசு தீர்மானம்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சம்பளங்கள் மற்றும் இதர கொடுப்பனவுகளை அடிப்படையாக கொண்டு   அவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளில் 50% ஆவது மாகாணசபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படல் வேண்டும் எனக்கருதி, உறுப்பினர்களின் தொலைபேசிப் பாவனைக்காக மாதாந்தம்  ரூ .25 ஆயிரத்தையும் அவர்களது காரியாலய முகாமைத்துவத்திற்காக மாதாந்தம் ரூ.50 ஆயிரத்தையும்  வழங்க அரசு தீர்மானித்துள்ளதாகத் தெரியவருகின்றது.
வடமேல் மற்றும் தென்மாகாண சபை உறுப்பினர்கள் பலருக்கு இப்போது தொலைபேசிப் பாவனைக்காக மாதாந்தம் 25 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றும் காரியாலயங்களை முகாமைத்துவம் செய்வதற்காக  அவர்களுக்கு மாதாந்தம் 50 ஆயிரம் ரூபா வழங்கப்படுமென உறுதியளிக்கப்பட்டிருந்த போதும் அது இதுவரை வழங்கப்படவில்லை.
எனவே, சகல மாகாண சபை உறுப்பினர்களுக்கும் இனிமேல் மாதாந்தம் 75 ஆயிரம் ரூபாவை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக  அரசு அறிவித்துள்ளது.  இதன் காரணமாக அரசு வருடாந்தம் 45 கோடி ரூபா வரை வரவு செலவு திட்டத்தில் ஒதுக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுளது .