ரவி கருணாநாயக்கவின்  பதவி பறி போகும் ஆபத்து?

ரவி கருணாநாயக்கவின்  பதவி பறி போகும் ஆபத்து?

மத்திய வங்கி பிணை முறி விற்பனை மோசடியில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ரவி கருணநாயக்கவின் பெயரும் பிரஸ்தாபிக்கப்பட்டு அவர்    பிணை முறி விசாரணை ஆணைக்குழு முன் ஆகஸ்ட் 2ம்  திகதி ஆஜராக இருக்கும் நிலையில்,  பிணை முறி விற்பனை தொடர்பான விசாரணைகள் நிறைவடையும்வரை அமைச்சுப் பதவியில் இருந்து விலகி இருக்க வேண்டும்  என்ற  கோரிக்கை இப்போது அரச தரப்பு சக அமைச்சர்களிடமிருந்தும் வலுப்பெற ஆரம்பித்துள்ளது.
ஏற்கனவே இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க, பிணை முறி விற்பனை குறித்து குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு எதிராக  சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இப்போது  குருநாகலில் நேற்று (30) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய  அமைச்சர் தயாசிறி ஜயசேகர வெளிநாட்டு அமைச்சர் ரவி கருணநாயக்க பிணை முறி விற்பனை தொடர்பான விசாரணைகள் நிறைவடையும்வரை அமைச்சுப் பதவியில் இருந்து விலகி இருக்க வேண்டும் அழுத்தமாக கூறியுள்ளார்.
எதிர்கட்சியினர் மட்டுமன்றி அரச தரப்பினரும் அவருக்கு எதிராக கிளர்ந்து எழுந்துள்ளதால் அவரின் அமைச்சுப்பதவி பறி போகுமா?