ஜனாதிபதியின் தலைமையில் தேசிய பொருளாதார பேரவை..

ஜனாதிபதியின் தலைமையில் தேசிய பொருளாதார பேரவை..

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட தேசிய பொருளாதார பேரவை முதற்தடவையாக நேற்று(12) ஒன்று கூடியது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான மங்கள சமரவீர, சரத் அமுணுகம, சுசில் பிரேம ஜயந்த, ஜனாதிபதி செயலாளர் ஒஸ்ரின் பெர்ணான்டோ, நிதி அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.எஸ்.சமரதுங்க, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் பதில் செயலாளர் சாந்த பண்டார மற்றும் தேசிய பொருளாதார பேரவையின் செயலாளர் நாயகம் பேராசிரியர் லலித் சமரக்கோன் ஆகியோரம் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு விவசாயம் மற்றும் தைத்தொழில் துறைக்கு முன்னுரிமை வழங்கி, தேசிய பொருளாதாரம் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வது தேசிய பொருளாதார பேரவையின் பொறுப்பாகுமென ஜனாதிபதி தெரவித்துள்ளார்.

இதேவேளை தேசிய பொருளாதார பேரவை இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை கூடவுள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது.