ஷில்பாவாக விஜய் சேதுபதி..

ஷில்பாவாக விஜய் சேதுபதி..

தனது அசாத்திய நடிப்பால் ரசிகா்களின் ஆதரவை பெற்றுவரும் நடிகா் விஜய் சேதுபதி தனது அடுத்தக்கட்ட மைல் கல்லாக பெண் வேடத்தில் நடித்து வருகிறாா்.

ஆரண்ய காண்டம் திரைப்படத்தை இயக்கிய தியாகராஜன் குமார்ராஜா இயக்கும் “அநீதி கதைகள்“ படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த படத்தின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் விஜய் சேதுபதி பெண் வேடமிட்டுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக தொிவிக்க்பட்டுள்ளது.

விஜய் சேதுபதியுடன் மலையாள நடிகர் ஃபகத் பாசில், சமந்தா மற்றும் காயத்ரி ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஆரண்ய காண்டம் படத்தில் அதிக அளவில் புதுமையை புகுத்தியிருந்தாா் யுவன் ஷங்கர் ராஜா.