உதட்டு சுருக்கத்தை எப்படி போக்கலாம்?

உதட்டு சுருக்கத்தை எப்படி போக்கலாம்?

வயதாவதால் முகத்தில் ஏற்படும் முதல் அறிகுறி தான் உதட்டுச் சுருக்கம். இதன் அதிகப்படியான தாக்கத்தில் இருந்து சற்று தப்பிக்க இங்கே சில எளிய முறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆலிவ் ஆயில்:
ஆலிவ் ஆயில் சுருக்கங்களை நீக்குவதில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. இதனை உங்கள் உதட்டில் தினமும் தேய்த்து வாருங்கள். இது உங்கள் உதட்டில் ஈரப்பதத்தைத் தக்க வைத்து சுருக்கங்களுடன் போராடி சரி செய்ய உதவுகிறது.

இலவங்கப்பட்டைப் பொடி:
இலவங்கப்பட்டைப் பொடியை சிறிது நீரில் கலந்து அந்தக் கலவையை உதட்டின் மீது தடவ வேண்டும். 10 நிமிடம் அதனை வைத்திருக்க வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரினால் கழுவி விட வேண்டும். இது மிக பழைய வீட்டு வைத்திய முறைகளில் உதட்டு சுருக்கத்தைப் போக்க பயன்படுத்தும் முறையாகும்.

கற்றாழை ஜெல்:
தினமும் 2 முறை இந்த கற்றாழை ஜெல்லை உதட்டில் சுருக்கங்கள் உள்ள இடத்திலும் அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும் தேய்த்து வர வேண்டும். இது உதட்டு சுருக்கத்தை விரட்டியடிப்பதில் சிறந்து விளங்குகிறது.

வைட்டமின் ஈ எண்ணெய்:
வைட்டமின் ஈ எண்ணெய் காப்ஸூல்களில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெயை உதட்டின் மீது தடவி 15 நிமிடம் ஏற வைக்க வேண்டும். பின்னர் கழுவி விட வேண்டும். இந்த இயற்கை வைத்திய முறையை தினமும் செய்து வர வேண்டும்

பப்பாளி:
இது உதட்டில் உள்ள இறந்த சரும செல்களை நீக்கி உதட்டின் அழகை மேம்படுத்துகிறது. சிறிது பப்பாளி பழத்தை எடுத்து மசித்து அதனை உதட்டின் மீது தேய்த்து 2 முதல் 3 நிமிடம் கழித்து கழுவி விட வேண்டும்.

தேங்காய் எண்ணெய்:
உதட்டில் தேங்காய் எண்ணெயை தேய்த்து மசாஜ் செய்து 15 நிமிடம் கழித்து அதனை சுத்தம் செய்து விடுங்கள். இதனை தொடர்ந்து செய்வதால் உதட்டில் உள்ள சுருக்கம் மறைவதுடன் அவை அடிக்கடி வராமலும் தடுத்துவிடும்.

சர்க்கரை ஸ்க்ரப்:
எலுமிச்சைச் சாற்றுடன் சர்க்கரையை சேர்த்து அதனை உதட்டின் மீது தடவி மெதுவாக மசாஜ் செய்யவேண்டும். இதனை வாரத்திற்கு 2 முறை செய்ய வேண்டும். குறிபிட்ட காலத்திற்கு இதனை தொடர்ந்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.