சமிஞ்சை மொழி சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்..

சமிஞ்சை மொழி சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்..

அங்கவீனம் தொடர்பான தேசிய கொள்கையின் மூலம் ´சமிஞ்சை மொழியானது´ விசேட தேவையுடைய நபர்களின் தொடர்பாடல் மொழியாக ஏற்க சமிஞ்சை மொழி சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதனடிப்படையில் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட மொழியாக சமிஞ்சை மொழியினை ஏற்படுத்துவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில், முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை இவ்வாறு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சமிஞ்சை மொழி சட்டமூலத்தை தயாரிப்பது தொடர்பில் சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் மலைநாட்டு உரிமைகள் தொடர்பான அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.

 

(rizmira)