நிலவும் காலநிலையில் தேங்காய்களின் விலையில் திடீர் மாற்றம்..

நிலவும் காலநிலையில் தேங்காய்களின் விலையில் திடீர் மாற்றம்..

காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக யாழ்.மாவட்டத்தில் தேங்காய்களின் விலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, யாழ். மாவட்டத்தின் பிரதான சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலிப் பொதுச் சந்தை உள்ளிட்ட சந்தைகளில் இன்றைய(14) விலை நிலவரப்படி பெரிய தேங்காய் ஒன்று 80/= – 85/= வரையும், நடுத்தரத் தேங்காய் ஒன்று 70/=, சிறிய தேங்காய் ஒன்று 60/= – 65/= வரையும் விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும், சந்தைக்கு வெளியே வியாபார நிலையங்களில் ஒரு பெரிய தேங்காய் 95/= வரை விற்பனை செய்யப்படுகின்றது.

தேங்காய்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளமையால் வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள் பலர் தேங்காய் விற்பனையை இடைநிறுத்தியுள்ளனர்.

தேங்காய்களின் திடீர் விலை அதிகரிப்பால் நடுத்தர மற்றும் குறைந்தளவு வருமானம் பெறும் குடும்பங்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளன.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெரிய தேங்காயொன்று 70/= – 75/= வரையும், நடுத்தரத் தேங்காய் 50/=, சிறிய தேங்காய் 40/= ஆகவும் விற்பனை செய்யப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)