இந்தியாவில் முதல் புல்லட் ரயில் திட்டம்..

இந்தியாவில் முதல் புல்லட் ரயில் திட்டம்..

இந்தியாவில் முதல் புல்லட் ரயில் திட்டம் அகமதாபாத் நகரில் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

மும்பை – அகமதாபாத் இடையேயான புல்லட் ரெயில் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று(14) நடைபெற்றது. இந்நிகழ்சியில், பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே இருவரும் இணைந்து இத் திட்டத்திற்கான அடிக்கல்லை நாட்டியுள்ளனர்.

மும்பை – அகமதாபாத் இடையே உள்ள 508 கி.மீ. தூரத்தை 3 மணி நேரத்தில் புல்லட் ரயில் கடக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, மணிக்கு 320 கி.மீ வேகத்தில் புல்லட் ரயில் பயணிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

1 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபா செலவில் நிறைவேற்றப்படும் இந்த திட்டமானது, 2022 அல்லது 2023ம் ஆண்டில் முடிவடைந்து 2022-ம் ஆண்டு முதல் ரயில் சேவை தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.