முகத்தில் உள்ள தழும்புகளை மறைத்து அழகிய சருமத்தை பெறுவது எப்படி?

முகத்தில் உள்ள தழும்புகளை மறைத்து அழகிய சருமத்தை பெறுவது எப்படி?

முகத்தில் எதாவது சர்ஜெரி செய்யும் போது அல்லது விபத்துகள் மூலம் காயங்கள் ஏற்படும் போது, அவை ஆறியபின் வடுக்களாக அல்லது வெட்டுகளாக தோற்றமளிக்கும். பருக்களை கிள்ளி விடுவதாலும், இந்த வடுக்கள் உண்டாகலாம்.
காலப் போக்கில் சில வடுக்கள் மறைந்து விடும். ஆனால் இவற்றை உடனடியாக போக்குவதற்கு சில வீட்டு வைத்தியங்கள் உண்டு. இவற்றை பயன்படுத்தி பலன் பெறுங்கள்

4 பாதாம் இரவில் ஊற வைக்கவும். காலையில் அதன் தோலை உரித்து நன்றாக அரைத்து பேஸ்ட்டாக்கவும். அதனுடன் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து வடுக்களின் மீது தடவவும்.
ஆலிவ் ஆயிலை வடுக்களின் மீது மெதுவாக தடவி மசாஜ் செய்யவும். இதை தொடர்ந்து செய்து வந்தால், வடுக்கள் அல்லது வெட்டுக்கள் மறைந்து விடு

பப்பாளி பழத்தை அரைத்து முகத்தில் மாஸ்க் போல போட வேண்டும். 15 நிமிடத்திற்கு பிறகு தண்ணீரால் முகத்தை கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்வதால் முகம் பொலிவடையும். முகத்தில் உள்ள வெட்டுக்கள் மற்றும் பருக்கள் மறையும் . மோரை தினமும் முகத்திற்கு பயன்படுத்தினால் வடுக்கள் மறையும்.

தக்காளியை தோல் உரித்து மசித்து முகத்தில் தடவி ½ மணி நேரம் கழித்து கழுவ வேண்டும். இதனால் பருக்கள் மறையும். வடுக்கள் தோன்றாது.

உருளைக்கிழங்கு ஜூஸை முகத்தில் தடவுவதால் முகத்தில் உள்ள களங்கங்கள் மறையும். இதனுடன் முல்தானிமிட்டியும் சேர்த்து தடவலாம்.

காய்ந்த ஆரஞ்சு பழ தோல் பவுடரை தயிருடன் சேர்த்து பேக் போல போடலாம். இதனால் சில தினங்களில் முகத்தில் உள்ள வடுக்கள் மறையும்.

கற்றாழை ஜெல் அல்லது க்ரீம் பயன்படுத்துவதால் , முகத்தில் பருக்களால் ஏற்படும் ஓட்டைகள் குறையும். சருமம் அழகாகும்.
எலுமிச்சை சாறை முகத்தில் வடுக்கள் உள்ள இடத்தில் தடவி வந்தால் விரைவில் வடுக்கள் மறையும்.