இலங்கை பாகிஸ்தானுக்கிடையில் வர்த்தக பொருளாதார உறவுகளை பலப்படுத்த புதிய அணுகுமுறை

இலங்கை பாகிஸ்தானுக்கிடையில் வர்த்தக பொருளாதார உறவுகளை பலப்படுத்த புதிய அணுகுமுறை

ஐக்கிய நாடுகள் சபையின் 72ஆவது பொதுச்சபை கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் பாகிஸ்தான் பிரதமருக்குமிடையிலான சந்திப்பு நேற்று(19) இடம்பெற்றுள்ளது.

தொடர்ச்சியாக இலங்கைக்கு உதவிகளை வழங்கத் தயார் என்று பாகிஸ்தானின் புதிய பிரதமர் சஹிட் கஹான் அப்பாஸி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உறுதியளித்துள்ளார்.

இரு நாடுகளுக்குமிடையில் இடம்பெறும் வர்த்தக பொருளாதார உறவுகளை மேலும் பலப்படுத்தி புதிய அணுகுமுறையூடாக அதனை முன்னெடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக பாகிஸ்தான் பிரதமர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்குமிடையில் பொருளாதார வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது தொடர்பில் தலைவர்கள் விரிவாக கலந்துரையாடியதுடன் எரிவாயு மற்றும் கனிய எண்ணெய் துறைகள் தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காகவும் இணைந்து செயற்படுவதற்கு தலைவர்கள் உடன்பாட்டுக்கு வந்ததுடன் பாதுகாப்பு தொடர்பிலும் இரு நாடுகளுக்குமிடையில் நிலவும் ஒத்துழைப்பை தொடர்ந்தும் பேணுவதற்கும் உறுதி அளித்துள்ளனர்.

இலங்கையின் அபிவிருத்திக்காக தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக பாகிஸ்தானின் புதிய பிரதமர் சஹிட் கஹான் அப்பாஸி ஜனாதிபதியிடம் நம்பிக்கை தெரிவித்தார்.