கின்னஸ் இல் இடம்பிடிக்க மாணவிகளும் களத்தில்.. -அது குறித்து வினவ முதலமைச்சர் நழுவியது இப்படித்தான்..

கின்னஸ் இல் இடம்பிடிக்க மாணவிகளும் களத்தில்.. -அது குறித்து வினவ முதலமைச்சர் நழுவியது இப்படித்தான்..

கின்னஸ் சாதனையை ஏற்படுத்தும் நோக்கில் மங்கள நிகழ்வொன்றில் மிக நீளமான சேலையை ஏந்திச் செல்வதற்காக பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தப்பட்டமை சட்டவிரோதமானது என ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

கண்டி – கன்னோருவ பகுதியில் மணமகள் ஒருவருக்கு நீளமான சேலைத் தலைப்பினை உடுத்தி கின்னஸ் சாதனை படைக்க முயற்சிக்கப்பட்டது. இதற்காக 200 மாணவர்களை வரிசையாக நிறுத்தி வைத்து குறித்த சேலைத் தலைப்பை ஏந்த வைத்துள்ளனர்.

குறித்த இந்நிகழ்வில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவும் கலந்து கொண்டிருந்தார்.

இவ்வாறு பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தப்பட்டமை சட்டவிரோதமானது என்று இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மத்திய மாகாண முதலமைச்சர், குறித்த நிகழ்வில் பயன்படுத்தப்பட்ட மாணவர்களின் பெற்றார் முறைப்பாடு செய்வார்களாயின், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டார்.

(riz_mira)