ஒரே நாளில் சாதனை படைத்த “மெர்சல்”…

ஒரே நாளில் சாதனை படைத்த “மெர்சல்”…

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் நேற்று(21) வெளியாகிய `மெர்சல்’ படத்தின் டீசர் ஒரே நாளிலேயே உச்சத்தை தொட்டு புதிய சாதனையை படைத்திருக்கிறது.

டீசர் வெளியான சில நிமிடங்களிலேயே அதிகமானோரால் பார்க்கப்பட்டது. தற்போது வரை `மெர்சல்’ டீசரை 8,589,250 பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

`மெர்சல்’ டீசரை இதுவரை 6 லட்சத்து 72 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். இதற்கு முன்னதாக அஜித்தின் விவேகம் படத்தின் டீசர் உலகளவில் அதிக லைக்குகளை பெற்ற டீசர் என்ற பெருமையை பெற்றிருந்தது. தற்போது அந்த சாதனையை `மெர்சல்’ டீசர் முறியடித்துள்ளது.

இந்த லைக் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவேகம் படத்தின் டீசரை இதுவரை 5 லட்சத்து 99 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர்