புவனேஷ்வர் குமார் அடியில் ஹர்திக் பாண்டியா அதிஷ்டவசமாக தப்பிப்பு..

புவனேஷ்வர் குமார் அடியில் ஹர்திக் பாண்டியா அதிஷ்டவசமாக தப்பிப்பு..

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 02வது ஒருநாள் போட்டியில் புவனேஷ்வர் குமார் அடித்த பந்து ஹர்திக் பாண்டியாவின் காதை தாக்கியது.

இந்தியா வந்துள்ள ஆவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவுடன் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

குறித்த இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான 02வது ஒருநாள் போட்டி கொல்கத்தாவில் நேற்று(21) நடைபெற்றது.

இதில் நாணய சுழற்ச்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இந்த போட்டியில் ஆவுஸ்திரேலிய வீரர் கூல்டர் நைல் வீசிய போட்டியின் 46.4 பந்தை எதிர்கொண்ட இந்திய வீரர் புவனேஷர் குமார் அடித்த ஷாட் மறுமுனையில் நின்றிருந்த ஹர்திக் பாண்டியாவின் காதை பதம் பார்த்தது.

அதிர்ஷ்டவசமாக ஹர்திக் பாண்டியாவிற்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.

Image result for hardik pandya injured yesterday

(rizmira)