டிரம்ப்பின் பயணத்தடை பட்டியலில் மேலும் 3 நாடுகள்…

டிரம்ப்பின் பயணத்தடை பட்டியலில் மேலும் 3 நாடுகள்…

அமெரிக்காவுக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்ட 6 நாடுகளுடன் தற்போது மேலும் மூன்று நாடுகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் சிரியா, ஈரான், சோமாலியா, ஏமன், லிபியா, சூடான், ஈராக் ஆகிய நாட்டவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதித்தார். நாட்டின் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பயணத்தடை பட்டியலில் மேலும் மூன்று புதிய நாடுகளுக்கு அதிபர் டிரம்ப் தடை விதித்துள்ளார். வடகொரியா, வெனிசுலா மற்றும் ஆப்ரிக்காவில் உள்ள சாத் ஆகிய நாடுகள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

“பாதுகாப்பான அமெரிக்காவை உருவாக்குவதே எனது முதல் பணி” என தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த பயணத்தடை குறித்து டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.