இலங்கை கிரிக்கெட் அணி ஐக்கிய அரபு இராய்ச்சியம் நோக்கி பயணம்..

இலங்கை கிரிக்கெட் அணி ஐக்கிய அரபு இராய்ச்சியம் நோக்கி பயணம்..

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் ஒருநாள் போட்டி மற்றும் T-20 போட்டிகளில் கலந்து கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணி ஐக்கிய அரபு இராய்ச்சியத்திற்கு பயணமாகியுள்ளது.

இலங்கை அணியில் தினேஷ் சந்திமால் டெஸ்ட் அணிக்கு தலைவராகவும், உபுல் தரங்க ஒருநாள் மற்றும் T-20 போட்டிகளுக்கு தலைவராகவும் செயற்படுவர்.

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் 02 டெஸ்ட் போட்டிகளும், 05 ஒருநாள் சர்வதேச போட்டிகளும், 03 T-20 போட்டிகளும் நடைபெறவுள்ளது.

முதலாவது டெஸ்ட்போட்டி இம்மாதம் 28ஆம் திகதி அபுதாபி நகரில் ஆரம்பமாகவுள்ளது.

இதனை தொடர்ந்து இலங்கை அணி கலந்து கொள்ளும் முதலாவது பகலிரவு டெஸ்ட் போட்டி அக்டோபர் மாதம் 06ம் திகதி டுபாயில் ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)