தமிழ் சினிமாவின் பக்கம் தலைசாய்க்கிறாரா நாமல் ராஜபக்ஷ..

தமிழ் சினிமாவின் பக்கம் தலைசாய்க்கிறாரா நாமல் ராஜபக்ஷ..

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் மற்றும் அனுஷ்கா ஷெட்டியை தனக்கு மிகவும் பிடிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

உங்களுடைய விருப்பமான நடிகர் யார் என டுவிட்டரில் கேள்வி ஒன்று கேட்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும் போதே நாமல் மேற்குறித்த இந்த தகவலை பதிவிட்டுள்ளார்.

மேலும், இளைய தளபதி விஜயின் மெர்சல் திரைப்பட டீசர் அண்மையில் வெளியிடப்பட்டது.

இதை பார்த்த நாமல், விஜயின் மெர்சல் டீசரை பார்த்து தாம் மகிழ்ச்சியடைவதாகவும், மெர்சல் திரைப்படத்தைப் பார்க்கவும், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் சில புதிய பாடல்களை கேட்க தாம் ஆவலாக உள்ளதாகவும் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

(riz_mira)