தென்கிழக்கு அமெரிக்க கடல் பகுதியை கடக்கிறது மரியா புயல்…

தென்கிழக்கு அமெரிக்க கடல் பகுதியை கடக்கிறது மரியா புயல்…

அட்லாண்டிக் கடலில் உருவாகிய மரியா புயல் கடந்த ஒரு வாரமாக கரீபியன் தீவுகளை தாக்கிய நிலையில் நேற்று(24) வலுவிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் 48 மணி நேரத்தில் தென்கிழக்கு அமெரிக்க கடல் பகுதியில் கரையை கடக்கும் என அமெரிக்க தேசிய புயல் மையம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 90 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், கேப் ஹாட்டெர்ஸ், தெற்கு கராலினா மாகாணத்தில் மழை பெய்யலாம் என்றும் கடலுக்கு யாரும் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.