வெறும் 3 மணி நேர டயட் இருந்தால் போதும் உடல் எடையை குறைக்கலாம்…

வெறும் 3 மணி நேர டயட் இருந்தால் போதும் உடல் எடையை குறைக்கலாம்…

டயட்டில் பல வகைகளை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். வெஜிடேரியன் டயட், கெடொஜெனிக் டயட், பேலியோ டயட், லோ கார்ப் டயட் போன்றவை மக்களால் பின்பற்றப்படும் சில வகை டயட்டாகும் .

3 மணி நேர டயட் என்பது 3 மணி நேரத்திற்கு ஒரு முறை சாப்பிடுவது தான். இதனை செய்யும்போது அடிப்படை வளர்ச்சி மாற்ற விகிதம் அதிகரிக்கும், இதனால் அதிக கலோரிகள் எரிக்கப்படும் நேரம் தான் எல்லாவற்றையும் கண்காணிக்கும் என்று

எப்படி மேற்கொள்ள வேண்டும்?
காலையில் எழுந்து ஒரு மணி நேரத்தில் காலை உணவை எடுத்துக்கொண்ட பிறகு ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கு பிறகும் உணவை சாப்பிட வேண்டும்.

இரவில் உறங்க செல்லும் 3 மணி நேரம் முன்னதாக இரவு உணவை எடுத்துக் கொள்ள விடும். இது தான் 3 மணி நேர டயட். ஒவ்வொரு முறை உண்ணுவதற்கு இடையில் அதிகம் இடைவெளி இருக்கும்போது, உடல் அந்த இடைவெளியில் உண்டாகும் பசியை எதிர்ப்பதற்காக கொழுப்பை தக்க வைத்து கொள்கிறது. இந்த இடைவெளியை குறைக்கும்போது , கொழுப்பு சேமிக்க படுவது குறைகிறது. இந்த பயிற்சியை தொடர்வது மூலம் ஒரு வாரத்தில் 1 கிலோ குறைவதற்கு வாய்ப்பு உண்டு

நன்மை:
கார்போஹைடிரேட், புரதம், மற்றும் கொழுப்பு போன்றவை சரியான விகிதத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. பழங்களும் காய்கறிகளும் இந்த டயட்டில் சேர்க்கப்பட்டுள்ளது. 3 வேளை முக்கிய உணவு 400 கலோரிகளும், 3 வேளை சிற்றுண்டி 70-80 கலோரிகளும், சேர்த்து ஒரு நாளைக்கு 1450 கலோரிகள் பரிந்துரைக்கப்படுகிறது. இது உடல் ஆரோக்கியத்திற்கு ஒரு நாளைக்கு தேவையான சரியான கலோரி எண்ணிக்கை.

உணவுகள் :
உணவில் கெட்ட உணவு என்று எதுவும் கிடையாது. கெட்ட அளவு தான் இருக்கிறது. இந்த டயட்டில் சாக்லேட் சாப்பிடும் போது சிறிய அளவு சாக்லேட் அல்லது சாக்லேட் பாரில் ஒரு பகுதி. இது எல்லாவற்றுடன் சேர்த்து 8 கப் (GLASS) தண்ணீர் அவசியம் பருக வேண்டும்.

தீமைகள்:
அடிக்கடி உணவு சாப்பிடும் போது, சில நேரம் அதிகம் உண்ணுவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆகவே உணவு அளவில் அவசியம் நமது கவனம் இருக்க வேண்டும். முக்கியமான ஒரு பின்னடைவு இந்த டயட்டில் என்ன வென்றால், இதில் உடற்பயிற்சி பற்றிய குறிப்புகள் இல்லை. உணவில் என்னதான் கட்டுப்பாடுகள் விதித்தாலும், பயிற்சி இல்லாத உணவு கட்டுப்பாடு ஒரு சிறந்த அனுகூலத்தை தர முடியாது.

எந்த டயட்டை பின்பற்றுவதாக இருந்தாலும், மருத்துவரிடம் ஆலோசனை பெற்று , உங்கள் உடல் தகுதிக்கு ஏற்ற டயட்டை பின்பற்றுங்கள். எந்த டயட்டை பின்பற்றினாலும், அதனுடன் சிறிதளவு உடற்பயிற்சியும் சேர்ந்தால் தான் பலன்கள் நல்லதாக இருக்கும்.