தினமும் ஆப்பிள் சாப்பிட்டா இதெல்லாம் நடக்குமா?

தினமும் ஆப்பிள் சாப்பிட்டா இதெல்லாம் நடக்குமா?

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவமனைக்கே செல்லத் தேவையில்லை என்று பழமொழி இருக்க அதையே வேதவாக்காக கொண்டு தினமும் ஆப்பிள் பழம் சாப்பிட்டே ஆக வேண்டும் என்று சிலர் கருதுகிறார்கள். ஆப்பிளை சாப்பிட வேண்டும் தான் ஆனால் அதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படும் என்று தெரியுமா?

கொழுப்பு :
ஆப்பிளில் அதிகளவு கார்போஹைட்ரேட்,ஃபைபர் உட்பட பல்வேறு சத்துக்கள் நிறைந்திருக்கிறது. இதிலிருக்கும் கார்போஹைட்ரேட் நம்முடைய எனர்ஜிக்கு மிகவும் அவசியமானதாகும். ஆனால் அதிகப்படியான ஆப்பிளை எடுத்துக் கொள்ளும் போது இதிலிருந்து கிடைக்கும் கார்போஹைட்ரேட் கொழுப்பாக மாறிடும். இதனால் ரத்தச் சர்க்கரையளவு அதிகரிக்கும்.

உடல் எடை :
சத்தான பழம் என்று வர்ணிக்கப்படுகிறது. அதே நேரத்தில் ஆப்பிளில் இதில் அதிகளவு கலோரி மற்றும் சர்க்கரை அதிகமாக இருக்கிறது. ஒரு ஆப்பிளில் 90 முதல் 95 கலோரிகள் இருக்கிறது. ஒரு நாளைக்கு ஆப்பிளைத் தவிர மற்ற உணவுகளையும் உட்கொள்வீர்கள். ஆப்பிளின் அளவு கூடும் போது, அதுவே அப்படியே தொடரும் போது கலோரியின் அளவும் அதிகரிக்கும் இதனால் உடல் எடை கூடிடும்.

இதயக் கோளாறு :
ஆப்பிளில் அதிகளவு ஃப்ரக்டோஸ் இருக்கிறது. இது குளோக்கோஸ் போல பயன் தராது. குளோக்கோஸினை நம் உடலில் உள்ள திசுக்கள் எனர்ஜியாக மாற்றிடும். ஆனால் ஃப்ரூக்டோஸ் கல்லீரலில் மட்டும் பயன் தரும். இதன் அளவு அதிகரிக்கும் போது கல்லீரலில் என்ற கொழுப்பு சேரும். இதனால் மாரடைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு.

பற்கள் :
ஆப்பிள் சிடர் வினிகர் பயன்பாடு தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் உடலுக்கு ஏகப்பட்ட நல்லது இருந்தாலும் வினிகரில் இருக்கும் ஆசிட்டினால் பற்களின் எனாமல் பாதிக்கப்பட வாய்ப்புண்டு. இதனை தவிர்க்க ஆப்பிள் சிடர் வினிகரை தண்ணீரில் கலந்து ஸ்ட்ரா மூலமாக குடிக்கலாம். இதனால் வினிகர் பற்களில் படிவதை தவிர்க்க முடியும். குடித்து முடித்ததும் மறக்காமல் வாயை கொப்பளிக்க வேண்டும்

எலும்புகள் :
அதிகமாக ஆப்பிள் சிடர் வினிகர் பயன்படுத்த ஆரம்பித்தால், அது நம் இரத்தத்தில் உள்ள பொட்டாசியம் அளவை அதிகரிக்கச் செய்திடும். இதனால் நம் எலும்புகளின் அடர்த்தியை குறைத்திடும்.