ரிஷாத் இனது  ‘திவியட உதானய’ வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி..

ரிஷாத் இனது ‘திவியட உதானய’ வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி..

நுண் மற்றும் வீட்டு கைத்தொழில்களை அபிவிருத்தி செய்வதற்கான ‘திவியட உதானய’ வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பல்வேறு துறைகளில் ஈடுபடுகின்ற வீட்டு உற்பத்தியாளர்கள் 10,000 பேரினை வணிக மட்ட வியாபாரிகளாக மாற்றுவதற்கு குறித்த இந்தத் திட்டம் முன்வைக்கப்பட்டிருந்து.

மேலும், அறிவு மற்றும் திறன் விருத்தி வேலைத் திட்டங்களின் மூலம் 11,000 தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதன் மூலம் நேரடி மற்றும் மறைமுகமான 11,000 வேலைவாய்ப்புக்களை புதிதாக உருவாக்குவதற்கு ஏதுவான வகையில் அரசாங்கத்தினால் செயற்படுத்தப்படுகின்ற இதனுடன் தொடர்பான பல்வேறு கடன் வழங்கும் திட்டங்களுடன் ஒன்றிணைந்து செயற்படுத்தப்படுகின்ற வேலைத்திட்டமாக ‘திவியட உதானய’ வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவது தொடர்பில் கைத்தொழில் மற்றும் வணிக நடவடிக்கைகள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கே அமைச்சரவை இவ்வாறு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

(rizmira)