அதிகரித்துள்ள செப்டம்பர் மாதத்திற்கான கைத்தொழில் உற்பத்திச் சுட்டெண்…

அதிகரித்துள்ள செப்டம்பர் மாதத்திற்கான கைத்தொழில் உற்பத்திச் சுட்டெண்…

2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான கைத்தொழில் உற்பத்திச் சுட்டெண் 6.0 சதவீதம் அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஏ.ஜே.சதரசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பபட்டுள்ளதாவது,

2016ஆம் ஆண்டின் மாதாந்த உற்பத்திகளுடன் ஒப்பிடுகையில் 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாத உற்பத்தியில் கைத்தொழில் உற்பத்திச் சுட்டெண் 6.0% ஆல் அதிகரித்துள்ளது. 2017 மற்றும் 2016 செப்டெம்பர் மாதங்களில் முறையே 107.1 மற்றும் 101.6 என கைத்தொழில் உற்பத்திச் சுட்டெண்ணானது அறிவித்துள்ளது.

கைத்தொழில் உற்பத்திச் சுட்டெண்ணானது மிக முக்கியமான குறிப்பிட்ட பொருளாதார குறிகாட்டியாக உள்ளதுடன் அதன் முக்கிய நோக்கம் குறிப்பிட்ட ஒரு காலப்பகுதியில் கைத்தொழில் உற்பத்தியின் அளவில் ஏற்படும் குறுகிய கால மாற்றங்களை வெளிக்கொணர்வதாகும். இது பொருளாதார அபிவிருத்தியின் திருப்புமுனைகளை ஆரம்ப கட்டத்தில் அடையாளங்காண பயன்படுகின்றது.

உற்பத்திக் கைத்தொழில்களில், 2016ஆம் ஆண்டு செப்டெம்பர் மாத உற்பத்திகளுடன் ஒப்பிடுகையில் 2017 செப்டெம்பர் மாத உற்பத்தியில் வடிவமைக்கப்பட்ட ‘உலோக உற்பத்திப்பொருட்கள்’, ‘அடிப்படை உலோக உற்பத்தி பொருட்கள்’, மற்றும் ‘அச்சிடுதலும் பதிவு செய்த ஊடகங்களின் மறுஉற்பத்தி’ ஆகியவை முறையே 26.1% 19.7% மற்றும் 16.4% என குறிப்பிடத்தக்க அதிகரிப்பை காட்டும் போது உணவு உற்பத்தியானது 7.3% ஆல் அதிகரிப்பை காட்டுகின்றது.

எனினும், கைத்தொழில் உற்பத்தியில் ‘தளபாடம்’, ‘பானவகை’ மற்றும் ‘இரசாயனமும் இரசாயனப் பொருள் உற்பத்தி’ ஆகியன முறையே 14.9%, 13.9% மற்றும் 12.7% வீழ்ச்சியைக் காட்டுகின்றன. உற்பத்திக் கைத்தொழில்களில், 2016ஆம் ஆண்டு மூன்றாம் காலாண்டு உற்பத்திகளுடன் ஒப்பிடுகையில் 2017 மூன்றாம் காலாண்டு உற்பத்தி 3.9% ஆல் அதிகரிப்பைக் காட்டுகின்றது.