சர்க்கரை வள்ளிக் கிழங்கு சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?

சர்க்கரை வள்ளிக் கிழங்கு சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?

நிறைய மருத்துவ குணங்களை தன்னுள்ளே ஒளித்துக்கொண்டு இனிப்பாய் இனிக்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கின் பயன்களை தெரிந்து கொள்ளுங்கள்

சத்துக்கள் :
100 கிராம் அளவில் சர்க்கரை வள்ளிக்கிழங்கில் 70 முதல் 90 சதவீதம் கலோரி ஆற்றல் கிடைக்கும். இதில் குறைந்த அளவிலான கொழுப்பு உள்ளது. நார்ச்சத்து, ஆன்டி ஆக்ஸிடண்ட்கள்,விட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் அதிகம் உள்ளன

எடை அதிகரிக்குமா?
சர்க்கரைவள்ளி கிழங்கில் பைபர் அதிகம் இருப்பதால் வயிறு நிரம்புவது போல் தோன்றும். நார்ச்சத்து, விரைவில் செரிமானம் ஆகாமல் தடுத்துவிடும். அதனால் உடலில் கொழுப்பு சத்தை சேர்க்க தூண்டும்.இன்சுலின் சுரப்பது தடுக்கப்படுகிறது. இதனால் எடை அதிகரிக்காது.

இரத்த அழுத்தம்:
இதில் பொட்டாசியம் உள்ளது. பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் மிக முக்கிய மினரல். அதனால் சர்க்கரைவள்ளி கிழங்கை உண்பது இரத்த அழுத்தத்தை சீராக்குவதால் இதை குறைந்த இரத்த அழுத்தம் இருப்பவர்களும் அதிக இரத்த அழுத்தம் இருப்பவர்களும் உண்ணலாம்.

அரிப்பு :
தோலில் அலர்ஜி ஏற்பட்டு அரிப்பு ஏற்பட்டால் சர்க்கரை வள்ளிக்கிழங்கை நன்றாக வேக வைத்து மசித்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனோடு மூன்று மடங்கு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்திடுங்கள் . பேஸ்ட் பதத்திற்கு வந்ததும் அதனை அரிப்பு உள்ள இடத்தில் தடவிக் கொள்ளுங்கள்.

நோயை எதிர்க்கும் :
மற்ற கிழங்கு வகைகளை விட இதில் அதிகளவு பீட்டா கரோட்டின் உள்ளது. இது நோயெதிர்ப்பு சக்திக்கு உதவிடும். இவை சரும ஆரோக்கியம், தோல் மற்றும் நரம்பு மண்டல செயல்பாட்டிற்கு பெரிதும் உதவிடும்.