சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரும் சமந்தா…

சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரும் சமந்தா…

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – சமந்தா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினிமுருகன்’ வெற்றிப் படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் – பொன்ராம் – சூரி – டி.இமான் வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் இணைந்திருக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.

இவர்களுடன் சிம்ரன், நெப்போலியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சிவகார்த்திகேயனின் தந்தையாக நெப்போலியனும், முதல்முறையாக வில்லியாக சிம்ரனும் நடிப்பதாக கூறப்படுகிறது.

இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிந்துவிட்ட நிலையில், மூன்றாவது கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தென்காசியில் தொடங்கியிருக்கிறது.

24 ஏ.எம். ஸ்டூடியோஸ் தயாரித்து வரும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல் போஸ்டர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு எதிர்வரும்  பிப்ரவரி 17-ஆம் திகதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.