உங்க வியர்வை துர்நாற்றத்துக்கு குட்பை சொல்ல இத மட்டும் ட்ரை பண்ணுங்க…

உங்க வியர்வை துர்நாற்றத்துக்கு குட்பை சொல்ல இத மட்டும் ட்ரை பண்ணுங்க…

டியோடரென்ட், பெர்ஃப்யூம், போன்றவை எல்லாம் இல்லாமல் யாரும் வெளியில் செல்வதில்லை. ஆனால் அவற்றின் ஆபத்தான பக்கவிளைவுகளைப் பற்றி அலட்சியமாக கடந்து செல்கின்றோம். அவற்றில் பயன்படுத்தக் கூடிய நச்சு மிக அதிகம் மிகுந்த இரசாயனங்கள் சரும செல்களை ஊடுருவி அங்கேயே தங்கிக் கொள்கின்றன.

கற்றாழை டியோடரெண்ட்:
தேவையானவை : கற்றாழை – 1/2 கப்
தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
விருப்பமான வாசனை எண்ணெய் – 10 துளிகள்

செய்முறை : கற்றாழை ஜெல்லை கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். அல்லது ஃப்ரெஷாக கற்றாழை இலையிலிருந்து ஜெல்லை பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து க்ரீம் போல் செய்து கொள்ளவும். பின்னர் உங்களுக்கு விருப்பமான பாதாம், ரோஜா அல்லது லானெண்டர் என ஏதாவது வாசனை எண்ணெய் 10 துளி கலந்து கொள்ளுங்கள். இதனை ஒரு கண்ணாடி பாட்டிலில் சேகரித்துக் கொள்ளுங்கள்.

பயன்படுத்தும் முறை : குளித்தவுடன் இந்த க்ரீமை வியர்வை வரும் பகுதிகளில் தடவிக் கொள்ளுங்கள். இவை உடலில் உருவாகும் கிருமிகளி அழிக்கிறது. சருமத்திற்கும் பாதுகாப்பு அளிக்கிறது. அக்குளில் கருமை உண்டாகாமலும் தடுக்கிறது.

எலுமிச்சை டியோடரென்ட் :
தேவையானவை :
சமையல் சோடா- 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு- 1/2 கப்

தயாரிக்கும் முறை : எலுமிச்சை சாறில் சமையல் சோடாவை கலந்து வைத்துக் கொள்ளுங்கள். கூட சிறிது நீர் அல்லது ரோஸ் வாட்டர் கலந்து கொள்ளலாம்.

பயன்படுத்தும் முறை : குளிக்கும்போது இந்த கலவையை தடவி 5 நிமிடம் கழித்து குளிக்க வேண்டும். இதனால் நாள் முழுவதும் வியர்வை நாற்றம் உண்டாகாமல் தடுக்கலாம்

ஆப்பிள் சைடர் வினிகர் டியோடரென்ட் :
தேவையானவை :
ஆப்பிள் சைட வினிகர் – 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை – 2டேபிள் ஸ்பூன்
நீர்- 2 டேபிள் ஸ்பூன்

தயாரிக்கும் முறை : எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் கலந்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். உபயோகப்படுத்தும் போதெல்லாம் நன்றாக குலுக்கி எடுத்து பயன்படுத்துங்கள். எலுமிச்சை வாசனையுடன் உங்கள் உடல் ஃப்ரெஷாக இருக்கும்.