UPDATE – தேர்தல் குறித்த  அதிவிசேட வர்த்தமானிக்கு இடைக்காலத் தடை..

UPDATE – தேர்தல் குறித்த அதிவிசேட வர்த்தமானிக்கு இடைக்காலத் தடை..

உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லைகள் மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கையைத் தீர்மானித்து வெளியிடப்பட்டிருந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு டிசம்பர் 04ம் திகதிவரை இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

——– UPDATE 

அதிவிசேட வர்த்தமானிக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட ரிட்- மனுக்கள், இன்று விசாரணைக்கு…

உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லைகள் மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கையைத் தீர்மானித்து வெளியிடப்பட்டிருந்த அதிவிசேட வர்த்தமானிக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட்- மனுக்கள், இன்று(22) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

நவம்பர் மாதம் 2ஆம் திகதியன்று வெளியிடப்பட்டிருந்த அதிவிசேட வர்த்தமானிக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள 06 ரிட்- மனுக்களே, இவ்வாறு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

குறித்த வர்த்தமானி அறிவித்தலை அதிகாரமற்றதாகக் கட்டளை பிறப்பிக்குமாறு கோரி, கொழும்பு, கண்டி, ஹாலி எல, மாத்தறை மற்றும் எம்பிலிபிட்டிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த வாக்காளர்கள் அறுவரால், நவம்பர் மாதம் 15ஆம் திகதி, இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

#rieeshma