கடும் பனிமூட்டம் காரணமாக இன்றும் ரயில் போக்குவரத்து பாதிப்பு…

கடும் பனிமூட்டம் காரணமாக இன்றும் ரயில் போக்குவரத்து பாதிப்பு…

டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக இன்றும்(22) ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டெல்லி, அரியானா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதுடன், காற்று மாசுபாடு காரணமாகவும் வாகனங்கள் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தலைநகர் டெல்லியில் இன்று(22) காலை முதல் பனிமூட்டம் அதிகரித்து காணப்பட்டதாகவும் முன்னால் செல்பவர்கள் கூட தெரியாத நிலை உருவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், புதுடெல்லி ரயில் நிலையத்திலும் பனியின் தாக்கம் அதிகமாக காணப்பட்டமையினால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், டெல்லியில் நிலவும் பனிமூட்டம் காரணமாக வெளியூர் செல்லும் ரயில்களில் சுமார் 30 ரயில்கள் தாமதமாக புறப்பட்டு செல்லும் எனவும் மேலும், 4 ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு ரயில் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.