தென்மேற்கு துருக்கியில் நிலநடுக்கம்…

தென்மேற்கு துருக்கியில் நிலநடுக்கம்…

துருக்கி நாட்டின் தென்மேற்கு பகுதியில் 5 ரிக்டரில் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

துருக்கி நாட்டின் தென்மேற்கு பகுதியில் நேற்று(22) இரவு உள்ளூர் நேரப்படி 8:22 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலநடுக்கம் முகலா மாகாணத்தில் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஏஜியன் கடலில் சுமார் 31 கிலோமீட்டர் தூரத்தில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சில கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. மேலும், அருகில் உள்ள நகரங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.