கண் இமை அடர்த்தியா இருக்கனும்னு ஆசையா?

கண் இமை அடர்த்தியா இருக்கனும்னு ஆசையா?

அடத்தியான புருவங்களும், அடத்தியான இமைகளும் தான் கண்ணுக்கும் பெண்ணுக்கும் அழகு.
புருவங்களின் வளர்ச்சியை அதிகரிக்க முக்கியமாக உதவுவது ஆயில் மசாஜ் தான்… இந்த பகுதியில் புருவங்களின் வளர்ச்சிக்கு என்ன செய்யலாம் என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது..

பாதம் எண்ணெய்:
புருவங்களில் உள்ள முடி வளர்ச்சிக்கு விளக்கெண்ணெய் பெரிதும் துணையாக இருக்குகிறது. அத்துடன் சம அளவு பாதாம் எண்ணெயும், ஆலிவ் எண்ணெயும் கலந்து, சில துளிகள் அரோமா எண்ணெய் கலந்து மசாஜ் செய்யலாம். அதனால் அவ்விடங்களில் இரத்த ஒட்டம் அதிகரித்து, ரோம வளர்ச்சியும் அதிகரிக்கும்.

மசாஜ்:
எண்ணெய் தடவி மசாஜ் செய்வதற்கு முன்பு, புருவங்களை இரண்டு விரல்களால் மெதுவாக கிள்ளி விட்டால், புருவத்தில் முடி வளர உதவுவதோடு, அடர்த்தியாகவும் கருமையாகவும் வளர வழி செய்கிறது. தினசரி குளிப்பதற்கு முன்பாக, புருவங்களின் மேல் கொஞ்சம் தேங்காய் எண்ணெயை தடவி, மசாஜ் செய்து விட்டு, ஊறியதும் குளிக்கலாம்.

விட்டமின் இ:
விட்டமின் E காப்ஸ்யூல்களை எடுத்து அதில் இருந்து ஜெல் வடிவ மருந்தை எடுத்து, அதை ஒரு தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெயுடன் நன்கு கலக்கி, இதனை தினமும் இரவில் தேய்க்க வேண்டும்.

ஆலிவ் எண்ணெய்:
ஆலிவ் எண்ணெய் எடுத்து, விரல் நுனி வைத்து சூடாகும் வரை நன்கு தேய்த்து, மென்மையாக 5 நிமிடங்கள் வரை வட்ட இயக்க வடிவில் விரலை வைத்து கண் இமைகளை மசாஜ் செய்ய வேண்டும்.

கிரீன் டீ:
சூடான நீரில் பச்சை தேயிலையை சேர்த்து உங்கள் கண் இமைகளிள் அதை தடவலாம். இது இமைகளுக்கு ஆரோக்கியமான வளர்ச்சியை ஊக்குவிக்கும் மற்றும் நீண்ட, தடிமனான, வலுவானதாகவும் இருக்கிறது.