மனுஷி சில்லர் – சமந்தாவை இணைத்த 3D டிசைனர் ஆடை…

மனுஷி சில்லர் – சமந்தாவை இணைத்த 3D டிசைனர் ஆடை…

ஹரியானாவை சேர்ந்த மனுஷி சில்லர் 2017ம் ஆண்டின் உலக அழகி பட்டம் வென்று இந்தியர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். இவருக்கும் சமந்தாவுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது.

உலக அழகி போட்டியில் பங்கேற்ற மனுஷியின் ஆடை அலங்காரமும், அதில் வடிவமைக்கப்பட்டிருந்த டிசைனும் பிரத்யேகமாக பேசப்பட்டது. கவர்ச்சியின் வெளிப்பாடாக அமைந்த இந்த காஸ்டியூமை டியோ ஃபல்குனி மற்றும் சைனி வடிவமைத்திருந்தனர்.

இவர்கள்தான் சமந்தாவின் திருமணத்துக்கான காஸ்டியூமை வடிவமைத்தவர்கள். 3டி எபக்ட்டுடன் இந்த ஆடை வடிவமைக்கப்பட்டிருந்ததால் திருமணத்துக்கு முன்னதாகவே அதை அணிந்து ரசித்த சமந்தா இணைய தளத்திலும் விதவிதமான போஸ்களில் புகைப்படம் எடுத்து பகிர்ந்தார். ஆடை வடிவமைப்பில் சமந்தாவுடன் ஒத்துப்போனதாகவும் கூறப்படுகின்றது.