காணாமல் போன நீர்மூழ்கி கப்பலை தேடும் பணியில் ரஷ்யாவும் இணைவு…

காணாமல் போன நீர்மூழ்கி கப்பலை தேடும் பணியில் ரஷ்யாவும் இணைவு…

அண்மையில் அட்லாண்டிக் கடலில் காணாமல் போன ஆர்ஜண்டீனா நீர் மூழ்கி கப்பலை தேடும் பணியில் ரஷ்யாவும் இணைந்து கொண்டுள்ளது.

குறித்த நீர் மூழ்கி கப்பலில் 44 ஆர்ஜண்டீனா கடற்படை வீரர்கள் இருந்துள்ளனர்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடி மீர் புட்டின் இக்கப்பலை தேடுவதற்கான கப்பல் ஒன்றையும் திறமையான ஊழியர்களையும் வழங்குவதாக தமக்கு உறுதியளித்துள்ளதாக ஆர்ஜண்டீனா ஜனாதிபதி மொரிசியோ மெக்ரீ தெரிவித்துள்ளார்.

நீர் மூழ்கி கப்பல் காணாமல் போன இடத்திலிருந்து கிடைக்கும் சமிக்ஞைகளை ஆர்ஜண்டீனா கடற்படை ஆராய்ந்து வருவதாக ஜனாதிபதி மெக்ரீ தெரிவித்துள்ளார்.