“Tradmed International Sri Lanka 2017” ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்…

“Tradmed International Sri Lanka 2017” ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்…

“Tradmed International Sri Lanka 2017” பாரம்பரிய சுதேச மருத்துவ முறைகள் பற்றிய சர்வதேச மாநாடு மற்றும் கல்விசார் வர்த்தகக் கண்காட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று(23) ஆரம்பமானது.

சுகாதார அமைச்சு, உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் என்பவற்றின் இணை ஏற்பாட்டில் இடம்பெறும் இம்மாநாடு நாளை(25) வரை கொழும்பு வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

பாராம்பரிய சுதேச மருத்துவ துறை ஆய்வுகளினால் நிரூபிக்கப்பட்டுள்ள உலகத்தரம் மிக்க அனுபவங்கள், அறிவு மற்றும் ஆற்றல்களை பரிமாறிக்கொள்வதற்கு தேவையான பின்னணியினை ஏற்படுத்துதல் இந்த மாநாட்டின் குறிக்கோளாக அமைவதுடன், பல்வேறு மருத்துவ துறைகளிலும் நிபுணத்துவம் பெற்றுள்ள மருத்துவ நிபுணர்கள் தமது ஆற்றலை விஞ்ஞான ரீதியான ஆய்வுகளுடன் வெளியிடுவதற்கு அரசு மற்றும் தனியார்துறை தொழில் முயற்சியாளர்களுடன் இணைந்து கொள்வதற்கான பின்னணியும் இதனூடாக ஏற்படுத்தப்படுகின்றது.

இந்நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க சுகததாச, சுகாதார பணிப்பாளர் நாயகம் ஜயசுந்தர பண்டார, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க மற்றும் உலக சுகாதார அமைப்பின் கிழக்காசிய பிராந்தியத்திற்கான பிராந்திய பணிப்பாளர் கலாநிதி பூனம் கெற்றாபல் சிங் உள்ளிட்ட குழுவினர்; பங்குபற்றினர்.