முகத்திற்கு பொலிவு தரும் ஆரஞ்சு தோல்…

முகத்திற்கு பொலிவு தரும் ஆரஞ்சு தோல்…

விட்டமின் C மற்றும் ஆன்டி-ஆக்சிடென்டுகள் நிறைந்த ஆரஞ்சு தோலை சருமம், தலைமுடி பராமரிப்பிற்கு பயன்படுத்தி வந்தால் தலைமுடியின் வளர்ச்சி மற்றும் முகத்தின் பொலிவு, நிறம் ஆகியவை அதிகரிக்கும்.

தலைமுடி:
உலர்ந்த ஆரஞ்சு தோல், வெட்டிவேர், சம்பங்கி விதை, பூலான் கிழங்கு, கடலை பருப்பு, பயந்தம் பருப்பு, கசகசா ஆகிய அனைத்தையும் நன்கு அரைத்து அதை வாரம் ஒருமுறை தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி பளபளப்பாகும்.

கண்கள்:
ஆரஞ்சு ஜூஸை ஃபரீஸரில் வைத்து ஐஸ் கட்டியாக்கி, அதை வெள்ளைத் துணியில் கட்டி, கண்களுக்கு மேல் ஒத்தி எடுக்க வேண்டும். இம்முறையை ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்து வர, கண்கள் பிரகாசமாக இருக்கும்.

முகப்பரு:
ஆரஞ்சு தோலை அரைத்து அதனுடன் கசகசா, சந்தனப் பவுடர் ஆகியவை கலந்து அதை தினமும் இரவு உறங்கும் முன் பருக்கள் உள்ள இடத்தில் தடவி காய்ந்ததும் முகத்தை கழுவ வேண்டும். இந்த சிகிச்சையால் பருக்களின் வடு மறைந்து முகம் பொலிவாக காணப்படும்.

முகத்தின் பொலிவு:
ஆரஞ்சு தோல் பவுடர், முல்தானிமட்டி, சந்தனம் ஆகிய மூன்றையும் ஒரே அளவு எடுத்து அதை தயிருடன் கலந்து, முகத்திற்கு பேக் போட்டு 5 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.